கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை ரித்து வர்மா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதை படக்குழு தெரிவித்து இருந்ததை தொடர்ந்து விஷாலின் “34 வது” படத்தை இயக்குனர் ஹரி இயக்க இருப்பதாகவும் அப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோ சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் இப்படத்திற்காக நடைபெற்ற பூஜையின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட்டாக ‘விஷால் 34’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், இது வித்தியாசமான போலீஸ் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.