எலுமிச்சை பழம் ஜூஸ் நாம் அதிகமாக குடிக்கும்போது நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
எலுமிச்சை பழம் ஜூஸ் குடிப்பது நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு மீறி குடிக்கும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எலுமிச்சம் பழத்தில் அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் இருப்பதால் பல் சிதைவு ஏற்படக்கூடும்.
மேலும் எலுமிச்சை ஜூஸ் குடித்த பிறகு பல் துலக்குவது மற்றும் வாய் கொப்பளித்து விட்டால் சிறந்தது. இது பல் சிதைவை கட்டுப்படுத்த உதவும்.
சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்கள் வாய்ப்புண் ஏற்படுத்த கூடியது. ஏற்கனவே நமக்கு வாயில் வெடிப்பு கொப்புளங்கள் இருந்தால் அது ஆறும் வரை எலுமிச்சை பழ ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது சிறந்தது.
எலுமிச்சை ஜூஸ் மட்டுமில்லாமல் எலுமிச்சம் பழத்தின் தோலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருக்கின்றது.
ஜூஸ்களுடன் எலுமிச்சை துண்டுகள் பரிமாறப்படுவதை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை பழச்சாறு உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும்போது ஒற்றைத் தலைவலி அடிக்கடி வரக்கூடும். தொடர்ந்து வலியை அனுபவித்தால் எலுமிச்சை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது மட்டும் இல்லாமல் நெஞ்செரிச்சல் குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.