Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

முகிழ் திரை விமர்சனம்

Mughizh movie Review

விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்க்கிறார்கள். இந்த நாயுமும் குடும்பத்துடன் பாசமாக இருக்கிறது. ஒரு நாள் விபத்தில் மகள் கண்முன் அந்த நாய் இறக்கிறது.

இதனால் விஜய் சேதுபதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது. குறிப்பாக மகள், நாய் இறப்புக்கு தான்தான் காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறார். இறுதியில் சோகத்தில் இருந்து விஜய் சேதுபதி குடும்பம் மீண்டதா? மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மகள் மீது காட்டும் பாசத்தில் கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா, மகளை திட்டுவது, பாசம் காட்டுவது, விஜய் சேதுபதியுடன் கோபப்படுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் ரெஜினா.

மகளாக வரும் ஶ்ரீஜா விஜய் சேதுபதி, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

சிறிய கதையை சிறப்பாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுவாமி நாதன். தந்தை, மனைவி, மகள், நாய் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களை நடிக்க வைக்காமல் வாழ வைத்திருக்கிறார்.

சத்யா பொன்மார் ஒளிப்பதிவும், ரெவாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘முகிழ்’ மகிழ்ச்சி.