தமிழ் சினிமாவின் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப் குமார். இந்த படத்தை தொடர்ந்து டாக்டர் என்ற படத்தை இயக்கிய மிகப்பெரிய வெற்றி கண்ட இவர் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார்.
ஐந்து கோடியில் தொடங்கிய இவரது சம்பளமும் படிப்படியாக உயர்ந்து பீஸ்ட் படத்திற்கு 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். ஆனால் இந்த படம் எதிர்பாராத விதமாக பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.
இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து இயக்கிய ஜெயிலர் படத்திற்கு 10 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார். அந்த படம் தமிழகத்தில் மட்டுமே 250 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்ததால் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
ஆமாம் நெல்சன் தனது அடுத்த படத்திற்கு 55 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களின் லிஸ்டில் நெல்சன் ஏழாம் இடம் பிடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
