Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஞ்சிதமே பாடல் குறித்து தமன் போட்ட பதிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

varisu movie team-decison-on-second-single-track

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக இவரது நடிப்பில் வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதன் வீடியோ பாடல் குறித்து பதிவு செய்துள்ளார் தமன்.

அதாவது அவரது ட்விட்டர் பதிவில் இப்போது தான் ரஞ்சிதமே முழு வீடியோ பாடல் பார்த்தேன். தியேட்டர்ல சீட்லயே யாரும் உட்கார மாட்டீங்க, அந்த அளவுக்கு மாஸாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம உற்சாகம் அடைந்துள்ளனர். உங்களை போல நானும் ஒரு ரசிகனாக காத்துக் கொண்டிப்பதாக தமன் தெரிவித்துள்ளார்.