தமிழ் சின்ன கதைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நேற்று முடிவடைந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வனிதா கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக சொல்வார் ஆனால் அது வெறும் சொல்லாகவே இருக்கும். வாய்ப்பு கேட்டு நேரில் சென்றால் கூட எந்த வாய்ப்பும் தர மாட்டார். கட்டிப்பிடித்து முத்தம் மட்டுமே கொடுப்பார் என தெரிவித்துள்ளார். நான் வாய்ப்பு கேட்டுச் சென்றபோது அதுதான் நடந்தது என பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வனிதாவின் இந்த பதிவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் கிடைத்து வருகிறது. வனிதா சொல்வது போல தர்ஷன் ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக சொன்னால் ஆனால் தற்போது வரை அந்த படம் பற்றி வேறு எந்த அறிவிப்பும் வரவில்லை என கூறி வருகின்றனர்.
இன்னொரு தரப்பினர் கமல் சொன்னது போல தன்னுடைய விக்ரம் படத்தில் மைனா நந்தினி, மகேஸ்வரி, சிவானி நாராயணன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.