நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. ’கஸ்டடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும் படிக்க இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
கஸ்டடி ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கஸ்டடி படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா ரசிகர்களுக்கு அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், அன்புள்ள நாகசைதன்யா ரசிகர்களே உங்கள் உற்சாகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வேலை நடக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. ‘கஸ்டடி’ திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Dear #ChayFans can totally understand ur excitement!! #custodyTeaser work is happening!! Will announce the release date ASAP!! Please kindly bare with us!!
— venkat prabhu (@vp_offl) March 3, 2023