தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைதான் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு சில படங்களில் தீவிரமாக நடித்து வந்த நயன்தாரா சமீபத்தில் ஃபுட் பாய்சன் காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது முறையாக ஹனிமூன் சென்றுள்ள நிலையில் இருவரது புகைப்படங்கள் தினமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது நடு ரோட்டில் நின்று கொண்டு இருவரும் ரொமான்ஸ் செய்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
View this post on Instagram