Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கையை அளித்தது அவர்தான்”: அஜித் குறித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, “மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன். ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் அவரை சந்தித்ததற்கு பின் எனது மனநிலை மாறிவிட்டது. உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கை அளித்தது அவர்தான்” என்று பேசினார்.

Aadhik ravichandran about Ajith
Aadhik ravichandran about Ajith