Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“ஜெயம் ரவி வைத்து படம் இயக்கி தவறு செய்து விட்டேன்”: பிரபல இயக்குனர் வருத்தம்

director suraaj about dhanush and jayam ravi movie

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுராஜ். மூவேந்தர், குங்கும பொட்டு கவுண்டர், மிலிட்டரி போன்ற படங்களை இயக்கிய இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கினார்.

தனுஷ் படங்களின் மூலம் சுராஜ் மார்க்கெட் உயர்ந்த நிலையில் மீண்டும் மூன்றாவதாக தனுஷ் உடன் கூட்டணி போட ஒரு கதையை தயார் செய்தார். அந்த சமயம் பார்த்து தனுஷ் மற்ற படங்களில் பிசியாக இருக்க கொஞ்ச நாள் காத்திருங்கள் என சொல்ல சுராஜ் அதற்குள் ஜெயம் ரவியை வைத்து சகலகலா வல்லவன் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் காமெடிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் படம் பெரிய அளவில் தோல்வியை தழுவியது. லைக்காவின் தயாரிப்பில் வெளியான இந்த படம் முதல் நாளே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் மனம் நொந்த சுராஜ் பேட்டி ஒன்றில் தனுஷால் வாழ்ந்தேன், ஜெயம் ரவியால் அழிந்தேன் என ஓப்பனாகவே பேசி உள்ளார். சகலகலா வல்லவன் படத்தை இயக்காமல் கொஞ்ச நாட்கள் காத்திருந்து தனுஷையே இயக்கி இருக்கலாம், தவறு செய்து விட்டேன் எ‌ன வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

இறுதியாக இவரது இயக்கம் மற்றும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை பெற்றது என்பதை குறிப்பிடத்தக்கது.

director suraaj about dhanush and jayam ravi movie
director suraaj about dhanush and jayam ravi movie