Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் படத்தில் கவுதம் மேனன்

Gautham Menon in the movie starring Big Boss celebrities

தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டிக்கும் படத்தில் சீரியசான கதாபாத்திரம். இவருடன் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.