Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சட்டவிரோத கட்டுமானம் – நடிகர் சோனு சூட் மீது போலீசில் புகார்

Illegal construction - Actor Sonu Sood complaint to police

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு தனது செலவில் அனுப்பி வைத்து பெயர் பெற்றவர்.

இந்தநிலையில் சோனு சூட் மீது மும்பை மாநகராட்சி ஜூகு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக கே.வார்டு உதவி கமிஷனர் அந்த புகாரை அளித்துள்ளார்.

ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டை பெருநகர மண்டல நகர திட்ட விதிகளை மீறி ஓட்டலாக மாற்றி உள்ளார் என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சோனு சூட்டுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி இருந்தது.

ஆனால் அந்த நோட்டீசை மீறியும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்ந்ததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இருப்பினும் போலீசார் சோனு சூட் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

மாநகராட்சி தனது புகார் தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கிய பிறகு வழக்குப்பதிவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.