தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பிரபலமான நிகழ்வு பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த வாரம் முடிவு பெற்றது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா வெற்றி பெற்றார்.
நிகழ்ச்சியில் மொத்தமாக முடிந்த பின்னரும் போட்டியாளர்கள் இரண்டு தரப்பாகவே பிரிந்து கருத்துக்களால் மோதிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போட்டியளராக பங்கேற்று இருந்த கானா பாலா அர்ச்சனாவுக்கு எதுக்கு டைட்டில் என தாக்கி பேசியுள்ளார்.
அதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா என்ன செய்தார்? என்ன எபோர்ட் கொடுத்தார்? ஒரு சின்ன பிரச்சனை, அதில் சண்டை போட்டுவிட்டு, நாலு வாரம் அதை வைத்து அழுதுகொண்டே இருந்தார். இதுக்கு பெயர் Effort-ஆ. முதல் நாளில் இருந்து அழுக துவங்கிவிட்டார். அவருக்கு டைட்டில் தேவையா என விமர்சனம் செய்துள்ளார்.