தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. தெலுங்கு மொழியில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார். இதையொட்டி சிகிச்சைக்கு பின் சினிமாவில் இருந்து விலகி சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள்.
விரைவில் சினிமாவில் நடிக்க திரும்ப இருக்கிறேன்.
ஆனால் அதற்கு முன்பு உடல் நலம் பற்றிய பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.