Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம். பரபரப்பான திரையரங்கம்

shows-cancelled-vijay-fans-argue-with-theatre

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள லியோ படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 20 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. முதல் காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கும் நிறைவடைகிறது. தற்போது தொடர் விடுமுறை என்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சிலர் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். சிலர் நேரடியாக வந்து டிக்கெட் எடுக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டு இருந்தது. இன்று காலை 9 மணி காட்சிக்கு சில ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும் சிலர் நேரடியாக வந்தும் டிக்கெட் எடுத்திருந்தனர். ஆனால் காலை 9 மணி கடந்த பிறகும் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திலே நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பொறுமை இழந்த ரசிகர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது தான் தியேட்டர் ஊழியர்கள் மிஷின் பழுதாகி உள்ளதால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உடனடியாக இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்துக்கு விரைந்து வந்து ரசிகர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்கள் கலைந்து செல்லாமல் நாங்கள் லியோ படம் பார்த்து தான் செல்வோம் என்று தொட ர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர். போலீசார் ரசிகர்களிடம் மிஷின் பழுதானதால் இன்று காட்சிகள் திரையி ப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு உங்களது அக்கவுண்டில் இன்னும் ஒரு வாரத்தில் பணம் வந்துவிடும் என்றும், நேரடியாக தியேட்டரில் வந்து டிக்கெட் எடுத்தவர்களுக்கு உங்கள் பணத்தை கையில் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறினர்.முதலில் இதை ஏற்காத ரசிகர்கள் எங்களுக்கு 2 மடங்கு பணம் வேண்டும் என்று கூறினர். ஆனால் போலீசார் அவ்வாறு தர முடியாது உங்களுக்கான பணத்தை மட்டும் வாங்கி செல்லுங்கள் என்று கூறினர். பின்னர் இதனை ஏற்று ரசிகர்கள் பணத்தைப்பெற்று அங்கிருந்து ஏமாற்றத்து டன் திரும்பி சென்றனர்.”,

shows-cancelled-vijay-fans-argue-with-theatre
shows-cancelled-vijay-fans-argue-with-theatre