Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறுவர்களுக்காக சூரி செய்த செயல். இணையத்தில் வைரலாகும் வீடியோ

soori latest video viral

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் சூரியிடம் குழந்தைகள் அவரது கேரவனை காண்பிக்கும் படி கேட்டனர். குழந்தைகள் கேட்டதும் அவர்களை கேரவனில் ஏற்றி சூரி சுற்றி காண்பித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, \”படப்பிடிப்பில், மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்\” என்று குறிப்பிட்டுள்ளார்.