லெஜெண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் “தி லெஜன்ட்”. இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். இதில் லெஜெண்ட் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தெல்லா கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
மேலும் ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்களில் உருவாகி இருக்கும் இப்படம் ஜூலை 28 அன்று வெளியாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்லவர் பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலான மொசலோ.. மொசலு.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் வரிகளில் அர்மான் மாலிக் மற்றும் முகேஷ் முகமது இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.