தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு சிறிய சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாக்கி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பாலாவின் பிறந்த நாளான நேற்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு வணங்கான் என தலைப்பு வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் சூர்யா மீனவனாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வளையதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கலந்து வருகிறது. சூர்யாவுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி என பலரும் கொண்டாடி வருகின்றனர்.