“இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ‘லியோ’ படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஸ்கிரிப்ட் கேட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு வெங்கட்பிரபு கண்டீசன் ஒன்று போட்டுள்ளார்.
அதாவது, ஏ.ஜி.எஸ். நிறுவனம், \”இன்று விஜய தசமி அந்த ஸ்கிரிப்டை கொஞ்சம் அனுப்புனா அதையும் பூஜ போட்டரலாம்\” என்று வெங்கட் பிரபுவை Tag செய்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.இதற்கு ரிப்ளை அளித்த வெங்கட் பிரபு, \”இது ஒரு நல்ல கேள்வி. சரியான கேள்வி. என் பிரச்சனை என்னனா.. கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியன் பண்ணுங்க.. ஆபிஸ்ல எங்க இருக்குனு சொல்றேன்.. ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி.. முதல் கட்ட படப்பிடிப்பே 15 நாட்கள் ஆச்சே.. இனிய விஜயதசமி\” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “,