தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மூத்த மகனான ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வேறு சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆமாம் கவின், ஹரிஷ் கல்யாண், அதர்வா தான் அந்த நடிகர்கள் என சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவரே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்களில் யார் ஹீரோவாக நடித்தால் சூப்பராக இருக்கும் என கமெண்ட்டில் சொல்லுங்க.
