தமிழ் சினிமாவில் சாதாரண ஸ்டண்ட் மாஸ்டராக நுழைந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. சமீப காலமாகவே உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக இருந்து வந்த விஜய் சேதுபதி தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.