குளிர்காலத்தில் கற்றாழை ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே கற்றாழை சாறு ஆரோக்கியம் நிறைந்த ஒன்று. இது சருமத்திற்கு கூந்தலுக்கு மட்டுமில்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இது உடலுக்கு மிகவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
கற்றாழையை தினமும் குடிக்கும்போது முகத்தில் சுருக்கங்களை நீக்கி முதுமையை குறைத்து முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
குளிர்காலங்களில் முகத்தில் வறட்சி அதிகமாக தெரியும்.அப்படி இருக்கும்போது முகப்பருக்கள் அதிகமாக வரும் அந்த பருக்களை நீக்க கற்றாழை ஜெல் பயன்படுகிறது.
மேலும் பற்களில் ஏற்படும் பிளேக் பிரச்சனையை நீக்கி வாயை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை வருவதை சரி செய்து பசியை அதிகரிக்கவும் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மஞ்சள் காமாலை நோய்களையும் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.