Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜி எடுத்த முடிவு.பாக்கியா கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி ,பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi serial episode update 06-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமும் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் பாக்கியா ராஜியை தங்களது ரூமுக்கு அழைத்து வந்த நிலையில் செல்வி எதுக்குகா வேண்டாத வேலை என்று சொல்ல ஒரு பொண்ணுடி அப்படியே விட்டுட்டு போக முடியாது இன்னைக்கு ஒரு நாள் நம்மோடு இருக்கட்டும் நாளைக்கு காலைல என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் என்று கூறுகிறார்.

பிறகு ராஜியிடம் உன் அப்பா அம்மா யாரு எங்க இருக்காங்க சொல்லு அவங்க கிட்ட உன்னை சேர்த்து விடுகிறோம் கண்டிப்பாக உங்கள் ஏத்துப்பாங்க என்று சொல்ல ராஜி நான் இப்பவே எங்கேயாவது போய்டுறேன் அவங்க கிட்ட போய் அவங்களுக்கு திரும்பவும் அவமானத்தை தேடி தர விரும்பல என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியா சரி நீ இப்ப படுத்து தூங்கு எதா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லி ராஜியை படுக்க வைக்க பாக்கியாவும் செல்வியும் தூங்கிய பிறகு ராஜி எஸ்கேப் ஆக முயற்சி செய்ய பாக்யா லைட்டை போட்டு தடுத்து நிறுத்தி படுக்க வைத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் கோமதி குடும்பம் குன்னக்குடிக்கு கிளம்பிக் கொண்டிருக்க பாக்கியா அமைச்சரை பார்க்க வந்திருக்கிறார். அமைச்சர் என்னுடைய நம்பிக்கையை நீங்கள் காப்பாத்திட்டீங்க சாப்பாடு எல்லாமே பிரமாதமா இருந்தது என்று பாக்யாவை பாராட்டுகிறார்.

இங்கே இவர்கள் எல்லாத்தையும் பேக் செய்து கொண்டு பாக்யாவிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று ரூமுக்கு வர எழில் அம்மா மினிஸ்டர் பார்க்க போய் இருக்காங்க எப்ப வருவாங்கன்னு தெரியல நான் போன் பண்ணி பார்க்கவா என்று கேட்க வேண்டாம் பா நாங்க ஊருக்கு போயிட்டு போன் பண்ணி பேசுகிறோம் என்று சொல்கின்றனர்.

ரூமுக்குள் ராஜி படுத்து தூங்கிக்கொண்டு இருக்க மீனா யாரு உள்ளே இருப்பதை பார்த்து யாருங்க அது என்று கேட்க செல்வி அது ஒரு பெரிய கதை என்று சொல்ல வர அமிர்தா அக்கா அவங்களே ஊருக்கு கிளம்புறாங்க எதுக்கு இப்ப அதெல்லாம் என்று தடுத்து விடுகிறார். கோமதி என்னங்க கதை சொல்லுங்க என்று கேட்க கதிர் ஏற்கனவே பஸ்க்கு டைம் ஆச்சு கிளம்பலாம் என்று சொல்லி கூட்டி சொல்கிறார்.

இவர்கள் வெளிய வந்து ஆட்டோ பிடிக்க தயாராக ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து பாக்யா இறங்க கோமதி அவரிடம் ஊருக்கு போவதாக சொல்ல பாக்யா கவலைப்படாமல் போங்க உங்க அண்ணன் வீட்டு பிரச்சனை கண்டிப்பா சரியாகிவிடும் என்று சொல்கிறார். அந்த நேரம் பார்த்து கதிருக்கு அவரது நண்பர்கள் போன் போட்டு ராஜியின் போட்டோவை கேட்க நான் பார்த்து அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி போனை வைக்க மீனா அவ சோசியல் மீடியா பக்கத்தில் போட்டோ இருக்கு நான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று அந்த போட்டோவை எடுத்து கதிருக்கு அனுப்ப கோமதி ஃபோனை வாங்கி போட்டோவை பார்த்து கண் கலங்கி விட்டு பாக்யாவிடம் காட்ட போட்டோவை பார்த்த பாக்யா அதிர்ச்சி அடைகிறார்.

நீங்க இப்ப ஊருக்கு போக வேண்டாம் ஒரு நிமிஷம் என்னோட ரூமுக்கு வாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்ல எதாக இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க பஸ்ஸுக்கு டைம் ஆச்சு என்று மீனா சொல்ல நான் சொல்றதை கேளுங்க அதை இங்க வச்சு பேச முடியாது என்கூட வாங்க என்று ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

கோமதியை உட்காரவைத்து ராஜீ ஹோட்டலுக்கு வந்த விஷயத்தையும் கண்ணனிடம் நடந்த பிரச்சனைகள், நகை தூக்கிக்கொண்டு கண்ணன் ஓடிய விஷயம் ராஜி ஏமாந்து நின்ற விஷயம் அவரை காப்பாற்றி தன்னுடைய ரூமுக்கு அழைத்து வந்தது என எல்லாவற்றையும் சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே கோமதி ராஜியை பார்க்க பாக்கியா ரூமுக்கு ஓடி வர எழில் அவங்க அழுதுட்டே இருந்ததினால் அமிர்தா மற்றும் செல்வி அக்காவோட கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கோம் என்று சொல்கிறார். பிறகு இவர்கள் எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு வர கோமதி ராஜியை பார்த்து ஷாக்காகி நிற்கிறார். ‌

ராஜி கோமதியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அத்தை நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். நான் குடும்பத்தோட மானத்தை குழி தோண்டி புதைத்து விட்டேன் என்று சொல்ல கோமதி ராஜியை பார்த்து கோபப்படுகிறார். மீனா அவனைப் பார்த்த ஒரே நாள்ல அவன் தப்பானவன் என்று எல்லாருக்கும் தெரியும் போது நீ எப்படி அவனை நம்பி இவ்வளவு தூரம் வந்த என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 06-02-24
baakiyalakshmi serial episode update 06-02-24