தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோல்வியை தழுவிய காரணத்தினால் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில் நன்றாக கூட்டு சேர்ந்து வெளியேறப் போகும் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நாமினேஷன் பட்டியலில் மிகவும் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்த பூர்ணிமா மற்றும் அக்ஷயா தான் அந்த இருவர் என தெரியவந்துள்ளது. இதனால் பூர்ணிமா வெளியேற்றத்திற்கு பிறகு புல்லி கேங்க் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.