சின்னத்திரை மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டும் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வரும் 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாக உள்ளது. மாபெரும் எதிர்பார்ப்பை உருவாகி இருக்கும் இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் ஜோராக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு இருக்கானா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய சிவகார்த்திகேயன் கடைசியாக பேசி முடிக்கும் முன்பு தெலுங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலை ரீ கிரியேட் செய்து அசத்தியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.
#Sivakarthikeyan imitates #AlluArjun 's #Pushpa mannerisms at #Mahaveerudu pre-release event#MahaveeruduFromJuly14th @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @bharathsankar12 @ShanthiTalkies @iamarunviswa @AsianCinemas_ @PrimeVideoIN pic.twitter.com/UAeOhvEHqF
— 123telugu (@123telugu) July 8, 2023