Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எல்.ஐ.சி படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட எஸ் ஜே சூர்யா..

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த அன்புக்கு மிக்க நன்றிகள் விக்னேஷ் சிவர் சார், லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் எனது முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன். எனது பெர்ஃபார்மன்சில் நீங்கள் எதிர்பார்த்தவைகளை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆவலாக எதிர்நோக்குகிறேன். காட்சிக்கு நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கொடுத்திருக்கும் தோற்றம் வாவ் சொல்ல வைக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.