தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் இணையதளத்தை தெறிக்க விட்டதை தொடர்ந்து இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தை அதிர வைத்து வருவதாக படக்குழு சிறப்பு வீடியோவுடன் தெரிவித்துள்ளது. அந்த சிறப்பு வீடியோவில் ரஞ்சிதமே பாடலுக்கு ரீல்ஸ் செய்த ரசிகர்களின் வீடியோ இடம்பெற்றுள்ளது.
#Ranjithame crosses 100M+ views now ❤️
Humongous love everywhere 😍📽️ https://t.co/Q56reRvcvc
🎵 https://t.co/gYr0tlcMmD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani #Varisu #VarisuPongal #RanjithameHits100M pic.twitter.com/TVvguolq7X— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022