தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா வீட்டிற்குச் சென்றிருந்த பாக்கியா ஏன் வருத்தமாய் இருக்கீங்க என்ன ஆச்சு என கேட்கிறார். அவரே என்னை ஏமாத்திட்டாரு. அந்தக் குடும்பத்தைப் பத்தி சொன்ன விஷயம் எல்லாம் பொய். எனற அவள கல்யாணம் பண்ணிக்க முடியாது அவருடைய மனைவியை எனக்கு தெரியும் அத மறைச்சு என்கிட்ட பழகியிருக்கிறார் என கூறுகிறார்.
நீங்க அவரோட குடும்பத்தை பத்தி யோசிக்காதீங்க உங்கள பத்தியும் மயூராவை பற்றி யோசிங்க என கூறுகிறார். பாக்கியா இவ்வாறு பேசுவதைப் பார்த்து ஒருவேளை டீச்சர் அவங்க வீட்டுக்காரருக்கு விவாகரத்து கொடுக்க ஒத்துகிட்டாங்க என சந்தேகம் வருகிறது. பிறகு பாக்கியா நான் என்னுடைய கஷ்டத்தை சொல்லலாம்னு வந்தால் நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க என வருத்தப்படுகிறார்.
உடனே ராதிகா உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க அவரு இப்போ வரவர ரொம்ப மோசம் ஆகிட்டாரு. அவருடைய நடவடிக்கையே சரியில்லே அவருக்கு யாருடனோ தொடர்பு இருக்கு என 100% சொல்லிவிடலாம். வீட்ல யாரிடமும் சரியா பேசுறதில்லை வீட்டுக்கு வரவே பிடிக்கலனு சொல்றாரு. என்னை அவருக்கு அப்போதிலிருந்தே பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்? வீட்டுல மத்தவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கு பாரு ஆனா இப்போ அதுவும் இல்ல எப்பவுமே டென்ஷனாகவே இருக்காரு அவருக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது தெரிகிறது என கூறுகிறார்.
அதன்பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகாவுக்கு நிறைய பிரச்சனை அவங்க கல்யாணம் பண்ணிக்க இருந்தவரும் அவர்களை ஏமாற்றியதா சொல்லி வருத்தப்பட்டாங்க. அவர் அவங்க கிட்ட நிறைய பொய் சொல்லி இருக்காரு. இப்போ இது எல்லாத்தையும் அவர்தான் ராதிகா கிட்ட சொல்லி இருக்காரு. உடனே அவளுக்கு எதுக்கு இன்னொரு கல்யாணம் இருக்கிற குழந்தைய பார்த்துட்டு அப்படியே வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதானே என கூறுகிறார்.
பிறகு ராதிகா வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் பேச முயற்சி செய்ய ராதிகா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார். டீச்சர் ரொம்ப நல்லவங்க அவங்களுக்கு என்ன துரோகம் பண்ண வெச்சிட்டீங்க என சொல்ல உனக்கு வேண்டுமென்றால் டீச்சர் நல்ல பிரண்டா இருக்கலாம். ஆனா எனக்கு நல்ல மனைவி கிடையாது என சொல்ல இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.