ராமம் ராகவம்’ படத்தின் முதல் காட்சியை (கிளிம்ப்ஸ்) தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தந்தை- மகனுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் தன்ராஜ் கொரானானி இயக்குனராக அறிமுகமாவது மட்டுமின்றி நடித்துள்ளார். மேலும், தன்ராஜின் அப்பாவாக சமுத்திரக்கனியும் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஹனுமான் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.
இந்த படத்தின் முதல் காட்சி நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ‘ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி’ என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது. மேலும், இந்த வீடியோவின் இறுதியில் ‘என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.
இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
2021-ம் ஆண்டில் வெளியான ‘சாஷி’ படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். துர்காபிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பிருத்விபோலவரபு தயாரிக்கிறார்.
ఓ తండ్రి కొడుకుల ప్రేమ కథ ఈ #Ramamraghavm❤️
ஒரு தந்தை மகனின் காதல் கதை ❤️ வெல்வோம்💪💪💪Telugu: https://t.co/C2eloRRVRd
Tamil: https://t.co/w45VZJ7anQ#HappyValentinesDayDAddY@thondankani @DhanrajOffl @Prudhvi_dir @DirPrabhakar @harishuthaman @Mokksha06 @durgaprasad_Dop pic.twitter.com/TWXwEqPLfl
— P.samuthirakani (@thondankani) February 14, 2024