தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா மேடம் எனக்கு என் பொண்ணு அம்மாவும் நல்லபடியா வீட்டுக்கு வந்து சேரணும். கார் ஓட்டுவதற்கு டீசல் போடனும் தெரியுமா என்று கேட்க பெட்ரோல் காருக்கு பெட்ரோல் தான் போடணும் அது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு பல்பு கொடுக்கிறார் பாக்கியா.உடனே கோபி ஓவரா பேசாத உன்னால முடியும்னா சொல்லு முடியாதுன்னா நான் என் அம்மாவையும் பொன்னையும் பிளைட் டிக்கெட் போட்டு கூப்பிட்டுகிறேன், இனியாவுக்கு கொடுத்திருக்கிறது ரோடு ட்ரிப் அசைன்மென்ட், பிளைட்ல கூட்டிட்டு போக எனக்கு தெரியாதா என்று சொல்ல அதற்கு எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமா உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா இடியட் என்று சொல்ல என்கிட்ட இருக்கு உங்க கிட்ட இருக்கா என்று பாக்கியா கேள்வி கேட்கிறார்.
முதல்ல நீங்க உங்க பிசினஸ் பாக்கறீங்களா உங்களுக்கு இன்கம் இருக்கா என்றெல்லாம் கேட்டு அவமானப்படுத்துகிறார். உங்களுக்கு ஏதாவது பணம் தேவைப்பட்டுச்சுன்னா சொல்லுங்க என்னால முடிஞ்சா உதவி பண்ணு யோசிக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். கோபி கடுப்பாகி போடு தூக்கி போட்டு உடைக்க திரும்ப அங்கு ராதிகா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். நீங்க பாக்கியாவை எப்ப விடுறீங்களா அப்போதான் சந்தோஷமா இருப்பீங்க என்று திட்டி விட்டு வெளியே செல்கிறார்.
அடுத்து பாக்கியா கார் ஓட்ட எல்லோரும் சந்தோஷமாக வந்து கொண்டு இருக்க திடீரென ஒரு பெரியவர் குறுக்கே வந்து விழுந்துவிட சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்து பாக்யாவிடம் லைசென்ஸ் கேட்க லைசென்ஸ் தொலைந்து போன பர்ஸில் இருப்பதால் இவர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.அடுத்து கோபியை கூப்பிட்ட அவரது நண்பர் இனியாவை காலேஜ் சேர்ப்பதற்காக வாங்கிய பணத்தை திருப்பி கேட்க ஆபீஸ் அக்கவுண்டில் பணம் இல்லாத காரணத்தினால் ராதிகாவிடம் பணம் கேட்க கேன்டினுக்கு கிளம்பி வருகிறார்.போலீஸ் பாக்கியாவை ஸ்டேஷனுக்கு வர சொல்ல அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி போன் செய்ய ஈஸ்வரி அவரிடம் விஷயத்தை சொல்ல போலீஸிடம் பேசும் பழனிசாமி கொஞ்ச நேரம் டைம் கேட்கிறார்.
பிறகு பாக்யாவிடம் வீட்டுக்கு போன் பண்ணி ஒரிஜினல் லைசென்ஸ் போட்டோ எடுத்து அனுப்ப சொல்லுங்க என்று கூறுகிறார்.பிறகு பாக்கியா மாமனார் ராமமூர்த்திக்கு போன் செய்ய கேன்டினில் இருக்கும் அவர் போனை எடுத்து பேச பாக்கியா நடந்த விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு பிரச்சனையா என்று அவர் அதிர்ச்சி அடைய கோபியும் ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
