Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா சொன்ன வார்த்தை..அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடிலும் தொடர்கதை வீட்டில் உள்ள எல்லோரும் பாக்யாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். ஈஸ்வரி கோபி இந்த குடும்பத்தை உடைக்க முதல் காரணம் நான் இரண்டாவது காரணம் நீதான் என கூறுகிறார்.

இன்னொரு பக்கம் கோபியின் அப்பா பாக்யா எடுத்த முடிவு தவறு. நீ இந்த வீட்ல தான் இருக்கணும். இந்த வீட்ல மகாராணி மாதிரி இருக்கணும் என கூறுகிறார். பிறகு கோபி எதுக்கு அவகிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க உனக்கும் இந்த குடும்பத்துக்கும் இனிமே எந்த சம்பந்தமும் கிடையாது வெளியே போ என சொல்கிறார்.

பிறகு எழில் ஒருத்தர் புடிக்கலனா அந்த வாழ்க்கை வாழறது ரொம்ப கஷ்டம். அப்படி பிடிக்காத வாழ்க்கையை வாழ சொல்லி எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க அவங்க சேர்ந்துதான் வாழனும்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு என்று கூறுகிறார். ஈஸ்வரி நீ பேசுறது மொத்தமே தப்புதான் என கூறுகிறார்.

இனியா எல்லாரும் இவ்வளவு சொல்றாங்க நீ ஏம்மா இந்த வீட்டை விட்டு போற நீ ஒரு பக்கம் இரு அப்பா ஒரு பக்கம் இருக்கட்டும் என சொல்ல நான் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கேன் இது நான் எடுத்த முடிவு இல்லை இதுக்கு முன்னாடி யாரும் எடுத்த முடிவுக்காக நடிச்சுக்கிட்டு இருக்கேன் என கூறுகிறார். என் பொண்ணு கிட்ட உனக்கு என்ன பேச்சு வெளியே போய் என்னை கோபி சொல்ல இனிய நான் இப்போ உன்கிட்ட ஒரு கேள்வி கேட்க போகிறேன் அதற்கு நீ தான் சரியான முடிவு எடுக்க வேண்டும் நீ எடுக்க முடிவில் தான் நான் உன்னோடு இருக்கணும் இல்லையா என்பது இருக்கு என கூறுகிறார்.

என்னம்மா கேளு என இனியா சொல்ல நீ அம்மாவோட இருக்க ஆசைப்படுறியா அப்பாவோட இருக்க ஆசைப்படுகிறாயா? என கேட்க ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update